ஆர்டர் உருவாக்கத்தின் போது பணமாற்ற வீகிதம் பூட்டப்பட்டு இறுக்கும்.
நீங்கள் ஒரு ஆர்டரை உருவாக்கி முடிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணமாற்ற வீகிதம் பூட்டப்பட்டு இறுக்கும். அந்தக் காலத்திற்குள் உங்கள் கட்டணம் எங்கள் கணக்கில் பிரதிபலிக்கும் வரை, அந்த வீதத்தைப் பெறுவீர்கள். ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த விகிதம் உங்கள் டாஷ்போர்டு மற்றும் பணம் அனுப்பும் ரசீதில் பிரதிபலிக்கும்.
எனது ஆர்டர் காலாவதியாகுமா?
எங்கள் கணக்கில், முழு கட்டணமும் பிரதிபலிக்கவில்லை என்றால் உங்களது ஆர்டர் 24 மணி நேரத்திற்குள் காலாவதியாகும். எனவே, நீங்கள் ஆர்டரை உருவாக்கியவுடன் உடனடியாக பணம் செலுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.
ஆர்டர் காலாவதியான பின்னரே எங்கள் வங்கி கணக்கில் கட்டணம் பிரதிபலித்தால், நாங்கள் உங்களிடம் கட்டணத்தை திருப்பித் தருவோம். நீங்கள் விரும்பினால் புதிய ஆர்டரை செய்யலாம்.
எனது ஆர்டருக்கான விகிதங்கள் எவ்வளவு காலம் பூட்டப்பட்டிறுக்கும்?
உங்கள் கட்டணத்தை நாங்கள் பெற்றவுடன், நாங்கள் ஆர்டரை 48 மணிநேரம் வரை மட்டுமே வைத்திருக்க முடியும்.
எங்களது இணக்கம் மற்றும் செயல்பாட்டுக் குழுவால், உங்களது ஆர்டர் உட்புறமாக செயல்படுத்தப்படும். கட்டணம் பிரதிபலித்தவுடனே மட்டுமே எங்கள் இணக்கக் குழு உங்கள் ஆர்டரை மதிப்பாய்வு செய்யும்.
கூடுதல் ஆவணங்கள்/ தெளிவுபடுத்தல்கள் தேவைப்பட்டால், ஆர்டர் நிலை, நடவடிக்கை தேவை என மாறும்.
கூடுதல் ஆவணங்கள் / விளக்கங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், 48 மணி நேரத்திற்குப் பிறகு (டெபாசிட் செய்யப்பட்ட நேரத்திலிருந்து) ஆர்டர் திருப்பித் தரப்படும்.