மணிமேட்சின் பயனர்கள் பரிவர்த்தனை செய்யும் இடங்களைப் பொறுத்தே மறுஉறுதி செயலாக்கம் செய்யப்படுகிறது. எனவே, நீங்கள் பணத்தை எங்கு அனுப்புகிறீர்களோ, அதை பொருத்தே ஒத்தீட்டு செயல்முறை அமையும் (இணையம் மூலம்/ இணையமில்லா).
ஆன்லைன் சரிபார்ப்பு செயல்முறை: e-KYC சரிபார்ப்பு
மலேசியாவில் உள்ள தனிப்பட்ட பயனர்களுக்கு இது கிடைக்கும்!
கணக்கை மறுஒத்திடு> இணையம் வழி மறுஒத்திடு> "அடுத்தது" என்ற தெரிவுகளைச் சொடுக்கவும்.
2. உங்களுடைய அடையாள ஆவணங்களைத் தயார் செய்யவும்
தேவைப்படும் அடையாள ஆவணம் தொடர்பான மேல் விவரங்களுக்கு என்னுடைய கணக்கை மறுஉறுதி செய்ய என்னென்ன தயார் செய்ய வேண்டும் பகுதியைப் பார்க்கவும்.
அசல் ஆவணங்களின் புகைப்படத்தையே சமர்ப்பிக்க வேண்டும். நகல்/ மின்னியல்/ அட்டையிடபட்ட பிரதிகள், முழுமையில்லாத பிரதிகள்/ மாற்றியமைக்கப்பட்ட அல்லது சேதமடைந்த ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
3. தேவைப்படும் செயலிகளுக்கு அனுமதியளிக்கவும்
இலகுவாக e-KYC அனுபவத்தைப் பெற ஒலிவாங்கி, புகைப்பட கருவி மற்றும் அறிவுறுப்பு அணுகுதலுக்கு அனுமதியளிக்கவும். இது இச்செயலி தேவைப்படும் ஆவணங்களைப் புகைப்படமெடுப்பதை இலகுவாக்குகின்றது.
4. உங்கள் அடையாள ஆவணங்களின் புகைப்படங்களை எடுங்கள்
உங்களுடைய ஆவணத்தின் இரு புறமும் புகைப்படமெடுக்கவும், பிறகு ஒரு எளிய காணொளி மறுஒத்திட்டையம் நீங்கள் வழங்கவேண்டும்!
இதோ உங்களுக்காக சில எளிய குறிப்புகள்:
1. உங்களுடைய அசல் ஆவணம் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.
2. உங்களுடைய அசல் ஆவணம் ஒளிக்கீற்றுகளாலோ உங்களுடைய விரல்களினாலோ மறைக்கப்பட்டிருக்கின்றதா என்பதை கவனிக்கவும்.
3.நீங்கள் எடுக்கும் புகைப்படம் தெளிவாக வாசிக்கும் விதமாகவும், முழுமையாக புகைப்பட வரையறைக்குள் இருப்பதையும் உறுதி செய்யவும். (செதுக்கப்படாமல், முழு புகைப்படம்)
4. மலேசிய அடையாள அட்டைக்கு, உங்களுடைய அடையாள அட்டையிலுள்ள ஹோலோகிராம் அமைப்பு நன்கு தெரியும் விதம் அதை லேசாக திருப்பவும்.
அதை தொடர்ந்து, நீங்கள் 5 நிமிட காணொளி ஒத்திடு செயல்முறையை கடக்க வேண்டும். காணொளியில் வழங்கப்படும் கட்டளைகளைப் பின்பற்றவும். (உதாரணத்திற்கு, சொல்லப்பட்டிருப்பது போல் எண்களை உரக்க சொல்லிவிட்டு உங்களுடைய தலையைத் திருப்பவும்)
"காணொளியைச் சமர்ப்பிக்கவும்"-யைச் சொடுக்கியவுடன் உங்களுடைய வேலை முடிவடையும்!
Select " Submit Video".
6. உங்கள் வேலைவாய்ப்பு விசாவை (மலேசியன் அல்லாத பயனர்கள்) சமர்ப்பிக்கவும்.
உங்கள் குறிப்புக்கான சில விரைவான உதவிக்குறிப்புகள் இங்கே:
1. உங்கள் ஆவணங்கள் கவனம் செலுத்தப்படுவதை உறுதிசெய்யவும்
2. உங்கள் ஆவணங்கள் கண்ணை கூசும் அல்லது உங்கள் விரல்களால் தடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
3. புகைப்படம் படிக்கக்கூடியதாகவும், சட்டத்திற்குள் முழுமையாகவும் இருப்பதை உறுதிசெய்யவும் (செதுக்கப்படவில்லை, முழு புகைப்படம்)
உங்களுக்கு அனுப்பப்படும் முக்கியமான மின்னஞ்சல்கள் "தேவையற்றவை" கோப்புக்கு செல்லாமல் இருக்க mm.compliance@moneymatch.co -யை உங்களுடைய தொடர்பு வரிசையில் சேகரிக்க மறவாதீர்கள்.
இணையமில்லா மறுஒத்திடு செயல்முறை
இணையமில்லா மறுஒத்திட்டை செய்ய உங்களால் முடியவில்லையென்றால், நீங்கள் இணையமில்லா மறுஒத்திட்டுடன் தொடரலாம்.
தேவைப்படும் அடையாள ஆவணம் தொடர்பான மேல் விவரங்களுக்கு என்னுடைய கணக்கை மறுஉறுதி செய்ய என்னென்ன தயார் செய்ய வேண்டும் பகுதியைப் பார்க்கவும்.
1. வணிகப் பயனர்கள்
இணையமில்லா மறுஒத்திட்டை பூர்த்தி செய்ய மணிமேட்சின் பிரதிநிதி உங்களைத் தொடர்புக் கொண்டு, உங்களுடைய அலுவகத்திற்கு வருகை புரிவதற்கான நாளை உறுதி செய்வார்.