ஒவ்வொரு நாட்டிலும் மணிமேட்ச் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன?
மலேசியா நடுவன் வங்கி கண்டிப்பாக மணிமேட்சை கட்டுப்படுத்துகிறது; மற்றும் பணம் அனுப்பும் வணிகமாக (வகுப்பு B) உரிமம் பெற்றது. பின்வரும் சட்டப்பூர்வ கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மணிமேட்ச் அனைத்து தொடர்புடைய சட்டங்களையும் விதிகளையும் கண்டிப்பாக பின்பற்றுகிறது:
பண மோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்ட விரோத செயல்களின் சட்டம் 2001 (சட்டம் 613)
பண சேவைகள் வணிகச் சட்டம் 2011
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010
நாங்கள் செயல்படும் இடமெல்லாம் உள்ளூர் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கும் படி எங்கள் கொள்கைகள் தயாரிக்கப்படுகின்றன – அதன் படி சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள்
தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள்
எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் வங்கி அளவிலான ஃபிஷிங்- எதிர்ப்பு உள் நுழைவு அம்சங்கள் மற்றும் மிகவும் பாதுகாப்பான சரிபார்ப்பு செயல்முறை ஆகியவை ஆகும்.
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு
உங்கள் பரிவர்த்தனைகளுடன் தொடர்பில்லாத வேறு எந்த காரணங்களுக்காகவும் நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம், மேலும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத அணுகலிலிருந்தும் உங்கள் கணக்கைப் பாதுகாக்க எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் உள்ளன.
வழங்கப்பட்ட தரவு, தகவல் அல்லது ஆவணங்கள் அனைத்தும் எங்கள் தனியுரிமைக் கொள்கையின்படி பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு தனிப்பட்டதாக வைக்கப்படுகின்றன. உங்கள் தரவைப் பாதுகாப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது; மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான MoneyMatch ஊழியர்களுக்கு மட்டுமே உங்களது தரவு அல்லது ஆவணங்களுக்கான அணுகல் இருக்கும்.
வழங்கப்பட்ட தகவலை நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மேலும் தெரிந்துகொள்ள, எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் பார்க்கலாம்.