தனிப்பட்ட பெறுனர்களுக்கு உங்கள் விசா காலாவதியானதும், எங்கள் தளங்களில் நீங்கள் பரிவர்த்தனை செய்யும் முன் உங்கள் புதுப்பிக்கப்பட்ட விசாவை பதிவேற்றும்படி கேட்கப்படுவீர்கள். இந்த ஐடியை சமர்ப்பிப்பது கட்டாய தேவைகளின் ஒரு பகுதியாகும் என்பதை நினைவில் கொள்க.
நீங்கள் மணிமேட்ச்சில் உள்நுழைந்ததும், உங்கள் புதிய ஆவணங்களை பதிவேற்றுமாறு கேட்கப்படுவீர்கள்.
கவனத்தில்கொள்க:
- உங்கள் அடையாள ஆவணங்களின் படத்தை (அதாவது JPEG வடிவத்தில்) நீங்கள் பதிவேற்ற வேண்டும்
- உங்கள் அடையாள ஆவணங்களின் விவரங்களைத் தடுக்கும் ஃபிளாஷ் இருக்கக்கூடாது
- உங்கள் படம், அசல் / செல்லுபடியாகும் ஐடியான ஆவணங்களின் தெளிவான படமாக இருக்க வேண்டும்
உங்கள் ஆவணங்கள் மதிப்பாய்வு செய்யப்படும், மேலும் கூடுதல் விளக்கங்கள் தேவைப்பட்டால் எங்கள் இணக்கக் குழு உங்களை அனுகும்.
ஒருவேலை உங்களுக்கு அசல் / செல்லுபடியாகும் ஐடிகள் வசம் இல்லை என்றால், இதுபோன்ற சூழ்நிலைகளில் எங்களால் உங்களுக்கு உதவ முடியாது, நீங்கள் இந்த ஆவணங்களை எங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே நாங்கள காத்திருக்க முடியும் என்பதையும் தயவுசெய்து கவனிக்கவும்.
புதுப்பிக்கப்பட்ட விசாவை முன்கூட்டியே புதுப்பிக்க விரும்பினால், ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை எங்களுக்கு வழங்கவும்!
நான் மலேசியாவை விட்டு வெளியேறியதால் எனது விசா புதுப்பிக்கப்படவில்லை, அதனால், மலேசியாவில் உள்ள எனது நிதியை என் சொந்த நாட்டிற்கு மாற்றுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் சொந்த நாட்டிற்கான பயணம், ஒரு நல்ல பயணமாக இருந்தது என்று நம்புகிறோம். மேலும் உதவிக்கு ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.